Categories: Tamil nadu

அலைபாயுதே திரைப்படம் பாணியில் வாழ்ந்த காதல் ஜோடி! – முடிவு கண்ணீர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுந்தரபெருமாள் கோயில் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. 26 வயதான இவர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேர் எதிர் வீட்டை சேர்ந்தவர் அனுஷியா பி.டெக் படித்து விட்டு வீட்டில் இருந்துவருகிறார்.woman love marrage style alaipayuthe – tears end

எதிர் எதிர் வீட்டில் இருந்த இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2015ஆம் ஆண்டு திருவிடைமருதூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழாமல் அலைபாயுதே திரைப்பட பாணியில் அவரவர் வீட்டில் தனித் தனியாக இருந்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில் அனுசியாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்க்க துவங்கினர். இதனால், செய்வதறியாமல் திணறிய புகழேந்தி கிராமத் தலைவர்களிடம் தனக்கும் அனுசியாவுக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறி ஆதாரத்தை நீட்டினர். இரு தரப்புக்குமான பேச்சுவார்த்தை கிராமத்தில் முடிவுக்கு வரவில்லை.

பிரச்சனை சுவாமிமலை காவல் நிலையத்திற்கு சென்றது. அங்கு நடந்த விசாரனையில் இருவரும் மேஜர் அனுசயாவை அவரது கனவரோடு அனுப்பிவிடுங்க எனக் கூறி அனுப்பினர் காக்கிகள்.

இதனால், அனுசியாவின் பெற்றோர் எங்களது மகள் செத்தாலும் சாவாள், அவனோட போக மாட்டாள் எனக்கூறி விட்டு சென்றார்கள். ஆனால், அவர்கள் செல்வதற்குள் அனுசியா தற்கொலை செய்து உயிரிழந்து கிடந்தார்.

இதைக்கண்டு, ஆத்திரமடைந்த அனுசியாவின் குடும்பத்தினர், புகழேந்தியின் வீடு, அவரது உறவினர்களின் வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தினர். அதோடு, புகழேந்தியின் உறவினரை தாக்கினர். பலத்த காயமடைந்த 3 பேர் குடந்தை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

4 mins ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

37 mins ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

1 hour ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

2 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

3 hours ago

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

19 hours ago