Type to search

ராகுல் காந்தியால் எப்போதும் பிரதமராக முடியாது!

INDIA

ராகுல் காந்தியால் எப்போதும் பிரதமராக முடியாது!

Share

ராகுல் காந்தியின் தாயாரான சோனியா காந்தி, இந்தியர் இல்லை என்ற காரணத்தால் ராகுலாக் பிரதமராக முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பேசியுள்ளது கூட்டணி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி திடீர் கூட்டணி அமைத்தது.

2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவினை எதிர்கொள்ளும் வகையில் இந்த கூட்டணி இருக்கும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி 2019ல் தனது கட்சி பெரும்பான்மை பெற்றால் பிரதமராவேன் என்று கூறியிருந்தார். கூட்டணி கட்சிகளின் சார்பில் ராகுல்காந்தி பொதுவான பிரதமர் வேட்பாளராகவே இருப்பார் என்று அரசியல் நோக்கர் கருதினர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தேசிய தேசிய ஒருங்கிணைப்பாளர்களான வீர் சிங் மற்றும் ஜெய் பிரகாஷ் சிங் ஆகியோர், 2019 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளிடம் பேசினர், அப்போது கட்சியின் தலைவரான மாயாவதி நாட்டின் பிரதமராவதற்கு இதுவே உகந்த நேரம், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கொள்ளும் துனிச்சல்  அவரிடம் மட்டுமே உள்ளது என்று ஜெய் பிரகாஷ் சிங் கூறினார்.

கர்நாடகாவின் முதலமைச்சராக குமாரசாமி ஆனதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மாயாவதி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை எதிர்கொள்ளும் துனிச்சல் அவர் ஒருவரிடம் மட்டுமே உள்ளது.

tags;-Rahul Gandhi always prime minister

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

பாஜகவிற்கு துணை போகிறாரா ரஜினி?…
எடப்பாடியின் குடும்ப ஊழல்! – ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம்! (காணொளி)
16-வயது சிறுமியைக் கடத்தி கர்ப்பமாக்கிய இளைஞர்!
ரஜினியின் ஆதரவால் சூப்பர் சாலையாகும் எட்டு வழிச்சாலை!
எய்ட்ஸ் தேவையில்லை! – காய்ச்சலால் கூட மரணமடையலாம்! – கொதிக்கும் ஸ்ரீ ரெட்டி!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :