Type to search

புழல் சிறையில் விரைவில் கம்பி எண்ணப்போகின்றார் ஜெயக்குமார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!

India Head Line Tamil nadu

புழல் சிறையில் விரைவில் கம்பி எண்ணப்போகின்றார் ஜெயக்குமார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ Jeyakumar wrap ropes jail }

காங்கிரஸை ஒழித்து விட்டதாகக் கூறும் ஜெயகுமார் விரைவில் புழல் சிறையில் கம்பி எண்ணப் போகின்றார் என தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சாடியுள்ளார்.

சென்னை புழல் அருகே காவாங்கரையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை வாய் திறக்காக அமைச்சர் ஜெயகுமார், கடந்த சில மாதங்களாக அடாவடித்தனமாக பேசி வருகின்றார்.

மேலும் காங்கிரஸை ஒழித்து விட்டதாகக் கூறும் ஜெயகுமார், விரைவில் புழல் சிறைக்குச் சென்று கம்பி எண்ணப் போகின்றார் எனத் தெரிவித்தார்.

மேலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட பாஜகவின் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணனுக்குத் தகுதியில்லை எனக் கடுமையாகச் சாடினார்.

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை அதிமுக மதுரையில் தொடங்கி விட்டதாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பரப்புரை குறித்த எந்தக் கேள்விகளும் வேண்டாம் என்றார்.

மேலும் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், நாடோடி மன்னனாகப் பிரதமர் வெளிநாட்டிலேயே சுற்றுகின்றார் எனவும் இந்திய ஏழைகளைப் பற்றிய கவலை பிரதமருக்கு இல்லை என்றும் கூறினார். விவசாய விலை பொருட்களுக்கு ₹200 விலை ஏற்றம் கண் துடைப்பு எனவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

Tags: Jeyakumar wrap ropes jail

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: