Type to search

​பெண் குழந்தை பெற்றதால் முத்தலாக் எனக் கூறி விவாகரத்து! – பெண் கண்ணீர்!

INDIA

​பெண் குழந்தை பெற்றதால் முத்தலாக் எனக் கூறி விவாகரத்து! – பெண் கண்ணீர்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

பெண் குழந்தையை பெற்றெடுத்ததால் தனது கணவர் வீட்டார் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் தனக்கு முத்தலாக் அளித்துவிட்டதாகவும் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.divorced saying muttalak baby girl – girl tears

அற்ப காரணங்களுக்காக சில நேரங்களில் முத்தலாக் அளிக்கும் விவகாரம் அவ்வப்போது நாடு முழுவதும் நடைபெற்று வரத்தான் செய்கிறது.

அண்மையில், உத்தரப்பிரதேசத்தில் தீய்ந்து போன சப்பாத்திகளை பரிமாறியதாகக் கூறி பெண் ஒருவரை அவரின் கணவர் தலாக் கூறி விவகாரத்து செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு முத்தலாக் விவகாரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆண் குழந்தைக்கு பதிலாக பெண் குழந்தையை பெற்றெடுத்ததால் அப்பெண்ணின் கணவர் வீட்டார் அப்பெண்ணை அடித்து துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

divorced saying muttalak baby girl - girl tears

மேலும் ஆண் குழந்தையை பெற்றெடுக்காததால் அப்பெண்ணிற்கு முத்தலாக் கூறி விவகாரத்து செய்த அவரின் கணவர், வீட்டை விட்டு வெளியேற்றினார்.

திரும்ப வீட்டிற்கு வரவேண்டும் என்றால் வரதட்சணையாக 50,000 ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று தர வேண்டும் எனவும் கூறி அவரை வீட்டை துரத்தியதால் செய்வதறியாது தவித்த அப்பெண் கடந்த 7 நாட்களாக கைக்குழந்தையுடன் சுற்றித்திரிந்து விட்டு பின் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

பெண்ணின் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளதுடன், மனித உரிமை ஆர்வலர்கள் இடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: