Type to search

நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு!

Tamil nadu

நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{court refused grant Nirmala Devi bail }

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நிர்மலா தேவி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகனுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 6-வது ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி. மாணவிகளை தவறானப் பாதைக்கு அழைத்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவர் மீது அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5-ம் தேதி நிர்மலா தேவி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி முத்துசாரதா, இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து 6-வது முறையாக மனுவைத் தள்ளுபடி செய்தார்.

மேலும், இந்த வழக்கில் முதற்கட்டமாக 1160 பக்க குற்றப்பத்திரிகையை விருதுநகர் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளனர். இரண்டாம் கட்டமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதால், இருவரின் ஜாமீன் மனுவுக்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: court refused grant Nirmala Devi bail

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: