Type to search

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி!

India Head Line Tamil nadu

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ AIADMK win constituencies parliamentary }

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை பாண்டிகோவிலில் நடந்த அதிமுக சாதனை விளக்க சைக்கிள் பேரணி தொடக்க கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரன் சதி செய்வதாக குற்றஞ்சாட்டினார்.

கட்சிக்காக தினகரன் என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார். இந்த சைக்கிள் பேரணி மூலம் முதன்முதலாக அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மதுரையில் தொடங்கி இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags: AIADMK win constituencies parliamentary

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: