Type to search

முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கின்றதா ? – பிரதமர் நரேந்திர மோடி கேள்வி

INDIA

முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கின்றதா ? – பிரதமர் நரேந்திர மோடி கேள்வி

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ Prime Minister Narendra Modi questioned }

உத்தரப்பிரததேசத்தில் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் அதி விரைவு சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கின்றதா என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

2 நாள் பயணமாக உத்தரப்பிரதேச மாநிலம் சென்ற பிரதமர் மோடியை ஆளுநர் ராம் நாயக், முதலமைச்சர் யோகிஆதித்யநாத் ஆகியோர் வாரணாசி விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பின்னர் அசம்காரில் 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பூர்வாஞ்சல் அதி விரைவுசாலை திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 340 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் இந்த அதி விரைவுசாலை பரபங்கி, அமேதி, சுல்தான்பூர் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை தலைநகர் லக்னோவுடன் இணைக்கும் விதத்தில் அமைக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த விரைவுசாலை மூலம் காய்கறிகள், பழங்கள் பால் உள்ளிட்டவற்றை குறைந்த நேரத்தில் டெல்லி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு செல்ல முடியும் என்றார்.

இதன் காரணமாக நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள கிராம மக்களின் அடையாளமே மாறும் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். பரம்பரை அரசியலில் ஈடுபடும் கட்சிகள் முஸ்லீம் பெண்கள் துயரப்படும் வகையில் முத்தலாக் முறை தொடர வேண்டும் என்று விரும்புவதாக மோடி சாடினார்.

முத்தலாக் முறைக்கு எதிராக அரசு போராடும் என்று குறிப்பிட்ட அவர், முத்தலாக் தடை சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுப்பதாக குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களுக்கானது என்று அதன் தலைவர் பேசியதாக குறிப்பிட்ட மோடி, அவர்களது கட்சி முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தானா அல்லது முஸ்லீம் பெண்களுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

முன்பு ஒருவரையொருவர் பார்க்க கூட விரும்பாமல் வெறுத்தவர்கள் எல்லாம் தற்போது இரவும் பகலும் ஒன்றிணைந்து தமக்கு எதிராக குரல் எழுப்புவதாகவும் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி சாடினார்.

இதனைத் தொடர்ந்து வாரணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக 21 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தியர் ஒருவர் ஜப்பான் பிரதமரை சந்தித்த போது, அவரிடம் வாரணாசி குறித்து பெருமையாக ஜப்பான் பிரதமர் பேசியதை மோடி சுட்டிக்காட்டினார்.

புதிய இந்தியாவுக்காக பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மாறாத புதிய வாரணாசி உருவாக்கப்படுகிறது என்றும், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் வாரணாசி வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Prime Minister Narendra Modi questioned

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: