Type to search

​“நான் மகிழ்ச்சியாக இல்லை”: மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி!

INDIA India Head Line

​“நான் மகிழ்ச்சியாக இல்லை”: மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

{ Karnataka Chief Minister Kumareshwi }

கர்நாடகாவில் நல்லாட்சியை கொடுக்க கால அவகாசம் தராமல் என்னை இகழ்வது ஏன் எனக் கேட்டு பொதுமேடையில் முதலமைச்சர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழுதார்.

பெங்களூருவில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயல்வீரர்கள் சார்பில், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் குமாரசாமி, உங்களில் ஒரு சகோதரன் முதல்வராகிவிட்டதாக நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், நான் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார்.

கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருப்பது எந்த அளவு மனவேதனை என எனக்குத் தெரியும் எனக் கூறிய குமாரசாமி, பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை எனவும் கூட்டணி அரசாங்கத்தின் வலியை விஷம் போல உட்கொண்டுள்ளதாகக் கூறி கண்ணீர் விட்டு தேம்பி அழுதார். மேலும் மக்கள் தன் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

கடவுள் அனுமதிக்கும் வரை பதவியில் இருந்து மக்களுக்கு நல்லது செய்வேன் என குமாரசாமி கண்ணீருடன் கூறியது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் அதிகப்படியான வரிகள் விதிக்கப்பட்டிருப்பதாக குமாரசாமியின் மீது விமர்சனங்கள் எழுந்தது, இதன் காரணமாக “Kumaraswamy is not my CM” என்ற வாசகங்களுடன் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்துகள் பகிரப்பட்டன.

பரமேஸ்வரா பதில்:

குமாரசாமியின் கண்ணீர் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் ஜி.பரமேஸ்வராவிடம் கேட்ட போது, “அவ்வாறு எப்படி அவர் கூற முடியும்? கண்டிப்பாக அவர் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார், அவர் மகிழ்ச்சியாக இருந்தால், நாங்களும் மகிழ்ச்சியாகவே இருப்போம்” என்றார்.

Tags: Karnataka Chief Minister Kumareshwi

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: