Type to search

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: ஒருதலைக் காதலால் விபரீதம்!

INDIA CRIME Tamil nadu

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: ஒருதலைக் காதலால் விபரீதம்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ girl friend murder oneside love }

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒருதலைக் காதலால் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இ.ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த பொன்.மகாலட்சுமி, சாத்தூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்து வந்தார். அவரை அதே பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் மதன் ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் தண்ணீர் எடுக்கச் சென்ற மாணவி மகாலட்சுமியை, தடுத்து நிறுத்திய மதன் காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகின்றது.

அதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மதன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகாலட்சுமியை கொடூரமாக குத்தி கொலை செய்தார். பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: girl friend murder oneside love

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: