Type to search

வன நிலத்தை வளைத்துப் போட்ட “போலிச்சாமியார்” ஜக்கி…! – அம்பலப்படுத்திய தலைவர்..!

INDIA India Head Line

வன நிலத்தை வளைத்துப் போட்ட “போலிச்சாமியார்” ஜக்கி…! – அம்பலப்படுத்திய தலைவர்..!

Share
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    19
    Shares

கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ளது ஈஷாவின் யோகா பயிற்சி மையம். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள சாமியார் ஜக்கிவாசுதேவ், யானைகள் செல்லும் வழித்தடங்களை மறித்து விதிகளை மீறி ஆங்காங்கே கட்டடங்களை எழுப்பியுள்ளார்.fake saint Jakie exposed forest land exposed leader

சட்டவிரோதமாக வெளிநாட்டினரை தங்க வைத்திருக்கிறார். அங்கு அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள சமஸ்கிருதி பள்ளியில் 14 வயது சிறுமியைக்கூட கட்டாயப்படுத்தி பிரம்மச்சாரியாக மாற்ற மூளைச்சலவை செய்து வருகிறார்கள்.

காற்றில் கரைந்த புகார் மனுக்கள் :

வெளிநாட்டில் படித்து மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பளம் வாங்கி வந்த தனது மூத்த மகள், பொறியாளராக பணிபுரிந்து வந்த இளைய மகள் இருவரும் யோகா பயிற்சி, ஜக்கியின் உரையாடல் மீது நாட்டம் கொண்டு ஈஷா ஆசிரமத்தில் தங்கிவிட்டனர்.

ஓராண்டாகியும் வீட்டிற்கு வரவில்லை. இருவரையும் மூளைச் சலவை செய்து உள்ளார்கள். அவர்களை மீட்டு தரவேண்டும். இப்படியாக அடுக்கடுக்கான புகார்களை பெற்றோர் எழுப்பியும் ஆட்சியாளர்கள் ஆசி வழங்கி வருவதால் காற்றோடு காற்றாக கரைந்துவிடுகின்றன புகார் மனுக்கள்.

உத்தமர் வேடம் போடும் ஜக்கி வாசுதேவ், தன்மீதான கறைகளை மூடிமறைப்பதற்காக வனப் பகுதிக்குள் 112 அடி உயரத்திற்கு ஆதியோகி சிலையை அமைத்து பிரதமரையே அழைத்து அவரது கைகளால் திறந்து சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு அங்கீகார முலாம் பூசினார்.

பண நிலமான வன நிலம் :

மத்திய-மாநில அரசுகளின் ஏகோபித்த ஆதரவு பெற்ற இந்த சாமியார், தனது யோகா மையத்திற்கு அருகாமையில் அரசு வழங்கிய 44.3 ஏக்கர் பட்டா நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வந்த மலைவாழ் மக்களை வெளியேற்றி அந்த நிலத்தையும் அபகரித்துக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட மலை மக்களின் புகார்கள் காற்றில் பறந்தன. காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை. மலைவாழ் மக்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டப்போராட்டத்தையும் நடத்தி வருகின்றன.

அம்பலப்படுத்திய தணிக்கை அறிக்கை :

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் பொருளாதார பிரிவு ஆய்வறிக்கையின் 32 வது பக்கத்தில் ‘யானை காப்பகங்களில் நகரமயமாக்கல்’ என்ற தலைப்பில் ஜக்கி வாசுதேவின் நில அபகரிப்பு அட்டூழியங்களையும் விதிமீறல்களையும் தமிழக அரசின் தான்தோன்றித்தனமான போக்கையும் அம்பலப்படுத்திக் காட்டியுள்ளனர்.

மலைப்பகுதியை வன விலங்குகள் வசிக்க (சூழலியல்) ஏற்புள்ள இடமாகவும், விரும்பக்கூடிய சுற்றுப்புறம் கொண்ட பகுதியாகவும் உருவாக்க 1990ஆம் ஆண்டு தமிழக அரசு மலைப் பகுதியை காக்கும் குழு (எச்ஏசிஏ)வை அமைத்தது.

அதன்படி, கோவை மாவட்டம் பூலுவாப்பட்டியில் இரண்டு குடும்பங்கள் வசிக்கும் அளவுக்கு மட்டுமே கட்டடங்கள் இருக்க வேண்டும். 300 சதுர மீட்டருக்குள்தான் வணிக மற்றும் அலுவலகக் கட்டடங்கள் கட்ட வேண்டும். இந்த கட்டடங்களுக்கே எச்ஏசிஏ-விடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து, பூலுவாப்பட்டி கிராமத்தில் அடுக்குமாடி கட்டடங்கள், பெரிய பெரிய அளவில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் கட்டக்கூடாது என்றும் அரசாணை எண் 49, வீட்டு வசதி நகரமயமாக்கல் துறை சார்பில் 2003 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி ஆணையும் வெளியிட்டது.

காட்டுக்கு வேட்டு :

மாநில அரசின் உத்தரவுகள் எந்த வகையிலும் எங்களை கட்டுப்படுத்தாது என்பதை நிரூபிக்கும் விதமாக கோயம்புத்தூர் ஈஷா பவுண்டேஷன் சார்பில் 1994 முதல் 2008 ஆம் ஆண்டுகள் வரைக்கும் பூலுவாப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத்தின் அனுமதியுடன் 32,856 சதுர அடி பரப்பளவில் பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல், 69,193 சதுர மீட்டரில் கட்டடங்களும் கட்டப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, 52,393 சதுர மீட்டரில் கட்டவிருக்கும் கட்டடங்களுக்கும், 3,34,331 சதுர மீட்டர் பரப்பளவில் வாகனம் நிறுத்துமிடம், சாலைகள், விளையாட்டு மைதானம் போன்றவற்றிற்கும் ‘மலைப்பகுதியை காக்கும்’ குழு அமைக்கும் முன்பு கட்டப்பட்ட கட்டடங்கள், குழு அமைத்த பிறகு கட்டப்பட்ட, கட்டவிருக்கும் கட்டடங்கள் அனைத்துக்கும் 2011 ஆம் ஆண்டில் வனத்துறையிடம் தடையில்லா சான்று கேட்டு ஈஷா மையம் அனுமதி கோரியுள்ளது.

ஈஷாவின் கடிதத்தை அடுத்து, அந்த பகுதிக்கு கள ஆய்வு நடத்தச் சென்ற மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. 2005 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரைக்கும் 11,973 சதுர மீட்டர் பரப்பளவில் முன்பு கட்டிய கட்டடங்களுக்கும் எச்ஏசிஏ குழுவை கலந்து ஆலோசிக்காமல் வன நிலம் அபகரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.

விபூதிப்பையில் அதிகாரம் :

பூலுவாப்பட்டி கிராமம் பாதுகாக்கப்பட்ட வனச் சரகத்தை உள்ளடக்கிய பகுதி என்பதால் யானைகள் வசிக்கும், நடமாடும் இடங்களில் நிலத்தை கபளீகரம் செய்து கட்டிடம் கட்டியது குறித்து 2012 ஆம் ஆண்டில் பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் விளக்கம் கேட்டும் பதில் அளிக்காத ஈஷா மையம் ‘அதிகார மையங்கள் எங்கள் விபூதிப் பைகளில்’ என்ற மமதையோடு தொடர்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது.

இதனால், செய்வதறியாமல் திகைத்த வனத்துறை அதிகாரிகள் தடையில்லா சான்று கோரிய ஈஷா மையத்தின் அனுமதி கடிதத்தை 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருப்பி அனுப்பி அவர்களால் முடிந்ததை செய்துள்ளனர். அப்படியிருந்தும், கட்டடங்கள் கட்டுவதை ஈஷா நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வந்தும் மத்திய-மாநில அரசுகள் தடுத்து நிறுத்தவில்லை. அதிகார வர்க்கத்தின் ஆசியோடு கார்ப்பரேட் சாமியாரின் அத்துமீறல் தொடர்ந்தது.

“அது இல்லனா இது” :

“திரிய விட்ட நாயும், கொத்தவிட்ட கோழியும் சும்மா இராது” என்பதைப்போல வனத்துறை சான்று கொடுக்கவில்லை என்றால் என்ன? எங்களுக்கு வருவாய்த்துறை உள்ளது என்று கொக்கரித்தது ஈஷா மையம். வருவாய்த்துறை தாசில்தாரிடம் தடையில்லா சான்று பெற்றுவிட்டோம். எச்ஏசிஏ குழுவை அணுகவேண்டும். அதற்கு மட்டும் தடையில்லா சான்று கொடுத்தால் போதும் என்று 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வனத்துறையை மீண்டும் அணுகியுள்ளது ஈஷா மையம்.

கட்டடங்கள் கட்டக்கூடாது என்ற விதிகளை முற்றிலும் மீறிய ஈஷா மையம், ஏற்கெனவே கட்டடங்களை கட்டி முடித்துவிட்டது. மேலும் இந்த கட்டடங்கள் காப்புக் காட்டிலிருந்து 100 மீட்டருக்குள் இருந்தும் முன்பே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கும் முன் தேதியிட்டு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட இந்த கட்டடங்கள் அனைத்தையும் இடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நபரால் வழக்கு தொடரப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய மாவட்ட வனத்துறை அதிகாரி. ஈஷாவின் கடிதத்தை முதன்மை தலைமை வனக் காப்பாளருக்கு அனுப்பி வைத்தார்.

நாணமில்லாதவர் :

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? வனச் சாலைக்கு இணையாக தெற்கிலிருந்து வடக்காக செல்லும் சாலையினை காப்புக் காட்டிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மாநில அரசும், வனத்துறையும் அமைக்கவில்லை. போதுமான வேலிகள் மற்றும் யானைகள் புகா அகழிகளும் வெட்டப்படவில்லை. காப்புக் காட்டிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் ஈஷா அமைத்திருக்கும் நீச்சல் குளத்துடன் கூடிய தண்ணீர் தொட்டியையும் அகற்றவில்லை.

ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவியை பொருத்தி பூகோள குறியீட்டுப் பகுதியின் எல்லைகளை வரைந்து அதன் மூலமாக வன ஆதாரங்களை பாதுகாக்க திட்டமிடவில்லை. ஈஷா மையத்தின் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.

மாறாக, ஈஷா மையத்தின் கட்டுமானப் பணிகள் தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்ட (டிப்பிஜிபி) எல்லைக்குள் இல்லை என மாநில அரசு விளக்கம் அளித்து ‘நாணமில்லாதவருக்கு நாலுபக்கம் வாசல்படி” என கார்ப்பரேட்களுக்கு கனிம வளங்களை கொள்ளையடிக்க துணை நிற்கிறது.

ஏழைகளின் எதிரியான எடப்பாடி :

ஏழை, எளிய மக்கள் வாழ்வதற்கு ஒரு சென்ட் நிலமும் இல்லாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் ஆங்காங்கு குடிசைகள் அமைத்தும் சிறுக சிறுக சேமித்து சிறிய அளவில் வீடு கட்டியும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தி காவல்துறையும், வருவாய்த் துறையும் கூட்டு சேர்ந்துகொண்டு புல்டோசர் எந்திரங்களைக் கொண்டு வீடுகளை இடித்து தன் சொந்த மக்களையே நடுத்தெருவில் நாதியற்றவர்களாக நிறுத்தி நிர்க்கதியாக்கி வருகிறது ஆளும் அதிமுக எடப்பாடி அரசு.

சேலம், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மலைகளில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் பூர்வகுடி மக்களாகிய பழங்குடி மக்கள் ஆங்காங்கே சிறிய அளவு நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வனத்துறை அதிகாரிகள் சிலர் விவசாய பயிர்களை அழித்து அட்டூழியம் செய்துள்ளனர். மலைமக்கள் ஆடு, மாடுகள் மேய்க்க தடை செய்வதோடு அபராதமும் விதித்து தண்டனையும் கொடுத்து வருகிறார்கள்.

திண்ணை தூங்கி அரசு :

அதேசமயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அதன் பசுமைகளை அழித்து நிலங்களை வளைத்துப்போட்டு அடுக்குமாடி கட்டடங்களை எழுப்பிக் கொண்டே இருக்கும் ஜக்கி வாசுதேவ்-க்கு பச்சை ரத்தினக் கம்பள வரவேற்பு அளித்து வருகின்றன எடப்பாடி அரசும், மோடி அரசும். இதன் நாசகர விளைவாக மலைகளில் வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் இருப்பதையும் அத்தியாயம் 2-ல் அம்பலப்படுத்தியிருக்கிறது கணக்காய்வு தணிக்கைத்துறைத் தலைவரின் அறிக்கை.

காப்புக் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது மட்டுமல்லாமல் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடும் வன நிலத்தில் சட்டவிரோதமாக மரங்களை அழித்து, அரசின் விதிமுறைகளை மதிக்காமல் ஆட்சியாளர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு கட்டுக்கடங்காமல் கட்டடங்களை எழுப்பிக் கொண்டு வருகிறது ஈஷா மையம்.

பொந்தில் மந்தி :

வனப் பகுதியில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் ஈஷா மையம், மலைகளில் வசிக்கும் மலை மக்களை வெளியேற்றி அவர்களின் நிலைத்தையும் வளைத்துப்போட்டு இருப்பதை தணிக்கைத்துறை தலைவரின் பொருளாதார பிரிவு அறிக்கை முழுமையாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் ‘பொந்தில் அகப்பட்ட மந்தியைப் போல’ அம்பலப்பட்டு நிற்பது ஈஷா மையம் மட்டுமல்ல அதிமுக எடப்பாடி அரசும், பாஜக மோடி அரசும்தான்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    19
    Shares
Tags: