Type to search

​வெளி உணவு பொருட்களை திரையரங்குகளில் அனுமதிக்க முடியாது: திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர்!

INDIA

​வெளி உணவு பொருட்களை திரையரங்குகளில் அனுமதிக்க முடியாது: திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

{ External food items allowed theaters }

வெளி உணவு பொருட்களை திரையரங்குகளில் அனுமதிக்க சாத்தியம் இல்லை என தமிழ்நாடு மேற்கு மண்டல திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் உணவு பொருட்களை அனுமதிக்க மறுத்து அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பதாக மஹாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த பொது நல வழக்கில் புற உணவு பொருட்களை திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும் எனவும் அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்யும் திரையரங்குகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு மேற்கு மண்டல திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் கூறுகையில் வெளி உணவு பொருட்களை திரையரங்குகளில் அனுமதித்தால் மற்ற பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் அந்த பொருட்களை அவர்கள் விட்டு சென்றால் சுகாதாரம் சீர் கெடும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கிராமபுறங்கள் மற்றும் நகரங்களின் செலவுகளை பொருத்தே உணவு பொருட்களிற் விலை நிர்ணயிக்கப்படுவதாகவும் தமிழகத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் மாநில அரசிடம் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்போம் எனவும் தமிழ்நாடு மேற்கு மண்டல திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Tags: External food items allowed theaters

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: