12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை!
Share

{ 12 years Bhavnisagar dam reached 88 feet }
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 88 அடியை எட்டுகிறது.
கேரளாவிலும் நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பி, உபரிநீர் பவானிசாகர் அணைக்கு வருவது அதிகரித்துள்ளது. இதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணை நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 691 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தற்போது, அணையின் நீர்மட்டம் 87 புள்ளி ஏழு ஒன்பது அடியாக இருக்கும் நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை நீர்மட்டம் 88 அடியை எட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணையில் 20 டி.எம்.சி. நீர் உள்ள நிலையில், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.
Tags: 12 years Bhavnisagar dam reached 88 feet
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பட்டதாரி பெண் எரித்து கொலை: வாட்ஸ் ஆப் காதலனின் வெறிச்செயல் ( முழு விபரம் )!
- விஜய் மல்லையாவைப் போல் வங்கிகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: ஜுவல் ஓரம் சர்ச்சை பேச்சு!
- முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கின்றதா ? – பிரதமர் நரேந்திர மோடி கேள்வி
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: ஒருதலைக் காதலால் விபரீதம்!
- அதிமுக ஆட்சியை கலைக்கவே எதிரியும், துரோகியும் கைகோர்த்துள்ளனர்: அமைச்சர் தங்கமணி!
- கர்மவீரர் காமராஜரின் 116 வது பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்!
- ஸ்ரீரெட்டியின் புகாருக்கு இயக்குநர், நடிகர்கள் பதில் அளிக்க வேண்டும் – டி.ராஜேந்தர்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamilnews.com
- Timetamil.com
- Gossip.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Srilanka.tamilnews.com