Type to search

முட்டை கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன்!

India Head Line Tamil nadu

முட்டை கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

{ 5000 crore scam Egg Ranadrishnan }

முட்டை கொள்முதலில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று, தமிழக அரசு மீது தாம் குற்றச்சாட்டு ஏதும் முன்வைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

முட்டை ஊழல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழகம் மொட்டைபோடப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று மட்டுமே தாம் கூறியதாகவும் அவர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ஊழல் இல்லா மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில், பாஜக தலைவர் அமித்ஷா கூறிய கருத்துகளை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என பாமக கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்கு ஏற்படும் என பதிலளித்தார்.

Tags: 5000 crore scam Egg Ranadrishnan

 

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: