Type to search

​புற்றுநோயை வென்ற இந்திய பிரபலங்கள்! – விவரம்!

INDIA

​புற்றுநோயை வென்ற இந்திய பிரபலங்கள்! – விவரம்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

தமிழ், இந்தி என பல மொழிகளில் அசத்திய நடிகை சோனாலி பிந்தரேவிற்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் புற்றுநோயை வென்ற பிரபலங்கள் பற்றிய செய்தி.indian celebrities won cancer

என்ன விலை அழகே என்ற பாடல் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை சோனாலி பிந்த்ரே.தன் அழகால் தமிழ் ரசிகர்களை கவர்ந்த சோனாலி பிந்தரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது சமீபத்தில் தெரியவந்தது.

இதனையடுத்து சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சோனாலி விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.

இதில் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பற்றிய கதைகளை ரசிகர்கள் பதிவிட்டு இருந்தனர். இதற்கு பதிலளித்த சோனாலி, தனக்கு இந்த கொடிய நோயை எதிர்கொள்வதற்கான தைரியத்தை ரசிகர்களின் அன்பு அளித்துள்ளதாக உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுவிட்டோம் என்று துவண்டுவிடாமல் அதை எதிர்த்து போராடி ஜெயித்தவர்கள் நமது நாட்டில் ஏராளம்.

2011ம் ஆண்டில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தவர் யுவ்ராஜ் சிங். இந்திய ரசிகர்களாகிய நமக்கு கொண்டாட்டத்தை பரிசாக கொடுத்த யுவ்ராஜ் சிங் உலகக்கோப்பை டோர்ணமெண்ட் முடிந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கபட்டுள்ளார் என தெரியவந்தது.

ஆனால் மைதானத்தில் எப்படி சவால்களை விளாசி தள்ளினாரோ அதே போல் புற்றுநோயையும் எதிர்த்து போரடினார். ஒரே ஆண்டில் புற்றுநோயை வென்று மீண்டும் களத்தில் இறங்கி அசத்தினார்.

இந்தியன், முதல்வன் ,உயிரே என தமிழ் ரசிகர்கள் கொண்டாடிய நடிகை மனிஷா கொய்ராலா. 2012ம் ஆண்டில் இவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். தற்போது உலகெங்கும் புற்றுநோய் பற்றிய விழ்ப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இவரை போல் கவுதமி, மம்தா மோகன் தாஸ் போன்ற நடிகைகளும் புற்றுநோயை வென்று இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமாக இருந்து வருகின்றனர்.

புற்றுநோயை எதிர்த்து போராடத் தொடங்கியுள்ள சோனாலி பிந்த்ரேவிற்கு இது போன்றவர்களின் வெற்றி கதைகள் கொடுக்கும் ஊக்கத்தினால் மீண்டும் ஜொலிப்பார் என நம்புவோம்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags:

You Might also Like