Type to search

சென்னையில் விற்பனையாகும் மீன்களில் பார்மலின் வேதிப் பொருள் கலப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

India Head Line Tamil nadu

சென்னையில் விற்பனையாகும் மீன்களில் பார்மலின் வேதிப் பொருள் கலப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{hybrid pharmaceuticals sale Chennai }

சென்னையில் விற்பனையாகும் மீன்களில் பார்மலின் வேதிப் பொருள் தடவப்படவில்லை என ஆய்வு முடிவுகளுக்கு பிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்பிடித்துறைமுகம், விற்பனையகம் உள்ளிட்ட இடங்களில் மீன்களின் மாதிரிகள் சோதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதில், சென்னையில் விற்பனையாகும் மீன்களில் ஃபார்மலின் ரசாயனம் தடவப்பட்டிருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை என தெரிவித்தார். தேவைக்கும் குறைவாகவே மீன்கள் பிடிக்கப்படுவதால் ஃபார்மலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் தமிழக மீனவர்களுக்கு இல்லை என விளக்கமளித்த அவர், ஃபார்மலின் கலப்பு தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

மேலும், மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிமாநிலத்திலிருந்து வரும் மீன்களில் ஃபார்மலின் கலந்திருந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Tags: hybrid pharmaceuticals sale Chennai

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: