Type to search

போலீஸாரின் சீருடை அணிந்து பணம் பறிக்க முயன்ற கில்லாடி பெண்!

Tamil nadu

போலீஸாரின் சீருடை அணிந்து பணம் பறிக்க முயன்ற கில்லாடி பெண்!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

நாமக்கல் அருகே அலங்காநத்தத்தில் போலீஸ் சீருடையில், அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணம் பறிக்க முயன்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.woman tried get money police uniform

காவல் உதவி ஆய்வாளர் உடையில் இன்று அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு வந்த அவர், மருந்துகள் முறைகேடாக வெளியில் விற்கப் படுவதாக புகார் வந்திருப்பதாக செவிலியர்களிடம் கூறியுள்ளார்.

அவரது பேச்சு பணம் பறிக்கும் நோக்கில் இருப்பதாக சந்தேகமுற்ற செவிலியர்கள் எருமப்பட்டி போலீஸாரை வரவழைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், போலீஸ் உடையில் இருந்தது மோகனூரைச் சேர்ந்த விமலாதேவி என்பது தெரியவந்தது.

எருமப்பட்டி, மோகனூர், அலங்காநத்தம் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் வசூலித்ததாகவும் ஒப்புக் கொண்டதையடுத்து, விமலாதேவி கைது செய்யப்பட்டார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: