Type to search

மோடியை பின்பற்றுவோரில் 1 கோடிப் பேர் போலிகள்..!

INDIA India Head Line

மோடியை பின்பற்றுவோரில் 1 கோடிப் பேர் போலிகள்..!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் பிரதமர் மோடியை பின்தொடரும் 1 கோடி கணக்குகள் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.One million followers Modi’s followers

முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பொய்யான கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. இந்த போலியான சமூகவலைத்தள பக்கங்களிலிருந்து தவறான தகவல்களும் வதந்திகளும் பெருமளவில் பரப்பப்பட்டு வந்தன.

இதனால், தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்பும் போலிக் கணக்குகளை கண்டறிந்து, அந்த கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் தற்போது முடக்கி வருகிறது. இதில் முதல் அடி பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் கிடைத்துள்ளது.

One million followers Modi's followers

ட்விட்டரில் அதிகமாக பின்பற்றப்படும் மூன்றாவது அரசியல் தலைவர் இந்தியப் பிரதமர் மோடி-தான் என்று கூறப்பட்டு வந்தது. அவரை 4 கோடியே 30 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால், போலிகளை கண்டறிந்து நீக்கும் ட்விட்டரின் அதிரடியான நடவடிக்கையால், பிரதமர் மோடியை ட்விட்டரில் பின்தொடரும் 1 கோடி கணக்குகள் போலி என்பது அம்பலமாகி இருக்கிறது.

இதனால் ஒரேயடியாக மோடியை பின்பற்றுவோரில் 1 கோடி பேரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

One million followers Modi's followers

பாஜக-வினர் ஒருவரே பல ட்விட்டர் கணக்குகளை துவங்கி, மோடிக்கு ஜால்ரா அடித்து வந்தனர். தற்போது ட்விட்டரின் நடவடிக்கையால் ஜால்ரா-க்களின் சத்தம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பின்தொடரும் 70 லட்சம் ட்விட்டர் கணக்குகளிலும் 20 லட்சம் கணக்குகள் போலி என்பது கண்டறியப்பட்ட உள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: