Type to search

நிர்மலாதேவி வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்: சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Tamil nadu

நிர்மலாதேவி வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்: சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

{ Nirmaladevi case completed 6 months }

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிபிசிஐடி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 24-க்குள் 3 கட்டமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இது தொடர்பாக வழக்கு விசாரனையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குரல் பரிசோதனை: நிர்மலாதேவி ஒப்புதல்

இந்நிலையில் நிர்மலாதேவிக்கு சென்னையில் கடந்த மாதம் குரல் பரிசோதனை நடைபெற்றது. சென்னை மயிலாப்பூர் தடயவியல் அலுவலகத்தில் நிர்மலாதேவிக்கு 3 மணி நேரத்திற்கு மேலாக பரிசோதனை நடத்தப்பட்டது. முன்னதாக குரல் மாதிரி சோதனைக்காக பேராசிரியை நிர்மலா தேவி மயிலாப்பூர் அழைத்து வரப்பட்டார். புழல் சிறையிருந்த நிர்மலா மயிலாப்பூர் தடயவியல் அலுவலகத்திற்கு வந்தார். தடயவியல் நிபுணர்கள் ஹேமலதா, நளினி ஆகியோர் குரல் மாதிரி சோதனை செய்தனர்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கும் செல்போன் ஆடியோவில் பதிவாகியுள்ள குரல் தனது குரல் தான் என நிர்மலாதேவி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற குரல்மாதிரி சோதனையின் போது இதனை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: Nirmaladevi case completed 6 months

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை:

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: