Type to search

இந்தியா எங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது! – ஈரான் தூதரகம் ஆதங்கம்..!

INDIA India Top Story

இந்தியா எங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது! – ஈரான் தூதரகம் ஆதங்கம்..!

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

ஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதைத் தவிர்க்க இந்தியா முடிவெடுத்துள்ள நிலையில், இந்தியா தங்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக ஈரான் நாட்டுத் தூதரக அதிகாரி மசூத் ரெஸ்வானியன் கூறியுள்ளார்.india betrayed us iran’s embassy

1998-ஆம் ஆண்டு, வாஜ்பாய் ஆட்சியின்போது இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதையொட்டி, அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தபோது, ஈரான்தான் அப்போது இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது, குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்கி உதவியது.

அதையெல்லாம் மறந்துவிட்ட இந்தியா, தற்போது அமெரிக்கா ஆதரவு நிலையை எடுத்து, ஈரானை வஞ்சித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

india betrayed us iran's embassy

ஈரானில் அணு ஆயுதம் இருப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு வைத்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது இரண்டாவது முறையாக பொருளாதார தடை விதித்துள்ளது. தனது நட்பு நாடுகள் எதுவும், ஈரானில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்யக் கூடாது என மிரட்டலும் விடுத்துள்ளது.

ஈரானில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில், ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று இந்தியாவுக்கும் அமெரிக்கா தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வந்தது. இந்தியாவும் அதை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க முடிவெடுத்துள்ள இந்தியா, இதுகுறித்து பெட்ரோலிய நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், தில்லியில் செவ்வாயன்று நடைப்பெற்ற அனைத்திந்திய சிறுபான்மையினர் முன்னணி மாநாட்டில், கலந்து கொண்டு பேசிய ஈரான் நாட்டுத் தூதரக அதிகாரி மசூத் ரெஸ்வானியன், இந்தியாவின் நிலைபாடு குறித்த ஈரான் நாட்டின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.

india betrayed us iran's embassy

‘இந்தியா எங்களிடம் (ஈரான்) கச்சா எண்ணெய் வாங்காமல், சவூதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து வாங்கினால், ஈரான் இதுவரை இந்தியாவுக்கு அளித்து வரும் அத்தனை சலுகைகளையும் இழக்க வேண்டியது வரும்’ என்று கூறியுள்ளார்.

‘எங்கள் நாட்டின் சபாஹர் துறைமுக விரிவாக்கப்பணிகளில் முதலீடு செய்வதாக இந்தியா வாக்குறுதி அளித்திருந்தது; ஆனால், சொன்னபடி இந்தியா நடந்து கொள்ளவில்லை’ என்று கூறியிருக்கும் ரெஸ்வானியன், ‘முன்பு இந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தபோது, ஈரான்தான் இந்தியாவுக்கு உதவியது, குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வழங்கியது’ என்றும் நினைவுபடுத்தியுள்ளார்.

‘ஆனால், தற்போது ஈரானை கைவிட்டு, அமெரிக்காவுடன் உறவுகொள்ள இந்தியா நினைக்கிறது’ என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தனது நிலையை இந்தியா பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ள ரெஸ்வானியன், ‘சபாஹர் துறைமுக விரிவாக்கப் பணிகளில் உடனடியாக முதலீடு செய்ய வேண்டும்; அத்துடன், ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

‘இல்லையெனில், ஈரான் இந்தியாவுக்கு அளித்துவரும் அனைத்து சிறப்பு உரிமைகiயும் இழக்க வேண்டியதாகி விடும்’ என்பதையும் வெளிப்படையாகவே அவர் கூறியுள்ளார்.

india betrayed us iran's embassy

ஈரான் அல்லாத நாடுகளிடம் பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்கு, ஈரானில் இருக்கும் துறைமுகத்தையும், ஈரானின் கடல் மார்க்கத்தை பயன்படுத்த விடமாட்டோம் என்றும் ஏற்கெனவே ஈரான் எச்சரிக்கை செய்துள்ளது. அத்துடன், பாகிஸ்தானுக்கு மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வழங்குவோம் என்றும் அறிவித்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: