Type to search

8 வழிச்சாலையை எதிர்த்து மாபெரும் போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு!

India Head Line Tamil nadu

8 வழிச்சாலையை எதிர்த்து மாபெரும் போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

{ DTV Dinakaran announcement }

தமிழகத்திற்கு 8 வழிச்சாலை தேவையில்லை என்று தெரிவித்துள்ள டிடிவி.தினகரன் விரைவில் அதனை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவதற்காக பல்வேறு வியூகங்களை வளர்த்து வருவதாக கூறிய அவர், ஜெயலலிதா வெற்றி பெற்றதைபோல் இந்த முறை தாங்கள் 37 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார்.

மேலும் பேசிய அவர் சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில், பொன்.மாணிக்கவேல் திறமையாக செயல்படுவதாக கூறினார்.

மேலும் நேர்மையான அதிகாரியான அவர் சுதந்திரமாக செயல்படுவதற்கான அதிகாரத்தை நீதிமன்றம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

மேலும் சிலை கடத்தல் விவகாரத்தில் இன்னும் யார் யாரெல்லாம் சிக்கப் போகின்றார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், 200 ஏக்கர் நிலத்தை அழித்து 8 வழிச்சாலை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. இந்த திட்டத்தை எதிர்த்து விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

8 வழிச்சாலை வேலையை விடுத்து தமிழகத்தில் இருக்கும் சாலைகளை எல்லாம் அகலப்படுத்தலாம் என்று கூறிய தினகரன், 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் நல்ல முடிவு விரைவில் வெளிவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: DTV Dinakaran announcement

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை:

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: