Type to search

டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும்! – தமிழக அரசு உறுதி!

India Top Story Tamil nadu

டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும்! – தமிழக அரசு உறுதி!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறாத டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.wine shop bars closed 7 days – government tamil Nadu

டாஸ்மாக் கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமின் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஒரு ஆண்டாக நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள பார்களில் உணவு பாதுகாப்பு சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது என்ற விவரத்தினையும் கேட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறவில்லை என்றால் ஏழு நாட்களில் மூடப்படும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து நீதிபதி கிருபாகரன், மது அருந்துபவர்களின் உடல் பாதுகாப்பு முக்கியம் என்பதால் டாஸ்மாக் பார்களில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு தரமான உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் டாஸ்மாக் கடைகளில் இரண்டு மணிக்கு ஏன் திறக்கக் கூடாது என்ற கேள்வியை முன்வைத்து இது தொடர்பாக 1 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: