வாழ்க்கையைப் பற்றி சிரிப்பும், கண்ணீருமாக பேசிய சன்னி லியோன்!
Share

நடிகை சன்னிலியோன் ஆரம்பத்தில் பார்ன் ஸ்டாராக இருந்து பின் ஹிந்தி சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார். சமூக வலைதளங்களில் எப்போதும் சர்ச்சைகளில் பேசப்படும் நபராகவும் இருந்து வந்திருக்கிறார்.sunny leone speaking tears life
இவர் தனது வாழ்க்கையை பற்றிப் பேசும் பயோகிராபிக் இணையதள தொடர் ‘கரன் ஜித்கவுர்–அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’ என்ற தலைப்பில் வரவிருக்கிறது.
இத்தொடரின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சன்னி லியோன், “நான் எப்போதும் என்னை பாதிக்கப்பட்டவளாக பார்ப்பதில்லை, அதனால் நான் மக்களின் பேச்சுகளுக்கு மென்மையான இலக்காக இருக்கிறேன்.
சரியோ, தவறோ அவர்களுக்கு தெரிந்த நியாயத்தின்படி நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டுமென்பதை சொல்ல அவர்களுக்கு உரிமையுண்டு.
ஆனால் பல நேரங்களில் அவர்களின் பேச்சு முட்டாள்தனமான இருப்பதால் நான் அதை ஒதுக்கிவிடுவேன். சில விஷயங்கள் எனக்கு பதட்டத்தை கொடுத்தாலும், அது என்னை பாதிப்பதில்லை. மாறாக எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது”என்று தெரிவித்தார்.
சன்னி லியோன் வரப்போகும் இணையதள தொடருக்காக தனது வாழ்க்கையைப் பற்றி எழுத்தாளர்களிடம் பேசிய நேரங்கள் “சிரிப்பும், கண்ணீருமாக” இருந்ததாகக் கூறினார்.
இந்தத் தொடரில் இடம்பெறக் கூடாத பகுதிகள் ஏதேனும் இருக்கிறதா? எனக் கேட்டதற்கு “நிறைய இருக்கிறது.
கதையை எந்த புரிதலின் அடிப்படையில் சொல்லப்பட வேண்டும் என்பது குறித்து இயக்குநர் ஆதித்யா தத் உடன் அமர்ந்து பேசினோம்.
ஏனென்றால் வாழ்வில் நல்லது, கெட்டது என இரண்டும் கலந்துதானே இருக்கும். ஆறு மாதங்கள் உட்கார்ந்து என் வாழ்க்கையில் நடந்ததைப் பற்றி அனைத்தையும் பேசி அதன் அடிப்படையில் 20 எபிசோடுகளை உருவாக்கியுள்ளோம்” என கூறினார்.
தொடரின் இயக்குநர் ஆதித்யா தத்துடன் தன் வாழ்வின் கதையை பகிர்ந்து கொள்வது என எடுத்த முடிவு சரிதானா…? எனக் கேட்டதற்கு சன்னி லியோன் ‘பயமாகத்தான் இருந்தது’ என்றார்.
ஆனால் இயக்குநர் ஆதித்யா தனது முழு கதையையும் அழகாக படமெடுத்துள்ளார் என்பதில் மகிழ்ச்சியெனவும் கூறினார்.
”நான் செய்த செயல் சரியென வாதிட்டாலும் ஆதித்யா அதை மிக அழகாக படமெடுத்துள்ளார். நான் நானாகவே காண்பிக்கப்பட்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ” எனவும் கூறினார்.
”என் தேர்வு சரியா, தவறா எனத் தெரியாமல் என்னைச் சுற்றி நானே வேலி போட்டிருக்கிறேன். ஆனால் இந்த வேலி சரியென்றே ஆழமாக உணர்கிறேன்’’ என்றார் சன்னி லியோன்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஓரினசேர்க்கையாளர்கள் தம்பதிகளாக வாழ்வது சட்ட ரீதியில் தவறு! – உச்சநீதிமன்றம்!
- ஆன்மிக அரசியலில் சீட்டிங்கிற்கு இடம் உண்டா?
- பாலியல் வன்கொடுமை! – வாய் பேசாத சிறுமி படுகொலை! (காணொளி)
- மணல் கடத்தல் தகாரறு! – வாலிபர் கழுத்தறுத்து கொலை!
- அரசியலில் இறங்குகிறாரா? – இயக்குனர் பா.ரஞ்சித்…!
- உயிரிழந்த தாயின் உடலை இருக்கசக்கரத்தில் எடுத்து சென்ற மகன்! – மருத்துவமனை அராஜகம்!
- 8 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை! – அரசு மருத்துவமனை மறுப்பு!
- டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும்! – தமிழக அரசு உறுதி!
- அண்ணணுக்காக உயிரிழந்த பாசத் தங்கை! – கோவில்பட்டி சோகம்!
- ஒரு மாணவி! ஒரு ஆசிரியர்! – இயங்கும் அரசுப்பள்ளி! (அதிர்ச்சி காணொளி)
- சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்!
- அந்த ஒரு விஷயத்தில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டும் நோக்கம்?
- தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் 196 கருணை மதிப்பெண் தர உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த டி.ராஜேந்திரன்!