Categories: INDIAIndia Top Story

கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால் இந்தியாவிற்கான சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்படும்!

{ Special criteria India canceled }

கடந்த ஏப்ரல் 2017 முதல் ஜனவரி 2018ம் ஆண்டு வரையில் ஈரான் 18.4 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது

ஈரானில் இந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த முயற்சித்தால் இந்தியாவிற்காக சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானில் சபாஹர் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு உதவுவதாக சொல்லிய இந்தியா இதுவரை எந்த உதவிகளையும் செய்யவில்லை என்றும், அமெரிக்காவின் வழிகாட்டுதலின்படி, கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த முயற்சித்தால் இந்தியாவிற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்றும் ஈரானின் துணைத் தூதர் மசூத் ரெஸ்வானியன் ரஹாஹி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை டெல்லியில் நடந்த வெளியுறவு கொள்கை குறித்தான மாநாட்டில் பேசிய ஈரான் துணைத் தூதர் மசூத் ரெஸ்வானியன் ரஹாஹி, கடந்த 2016ம் ஆண்டு கையெழுத்தான இந்திய, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின்படி சபாஹர் துறைமுகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கவும் உதவுவதாக தெரிவித்திருந்த இந்திய அரசு இதுவரை அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கின்றது.

மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து பேசுகையில், ஈரான் எப்போதும் இந்தியாவிற்கு நம்பிக்கையான பங்களிப்பாளராகவே இருந்து வருகின்றது. அமெரிக்காவின் வழிகாட்டுதலில்படி, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலைக் கைவிட்டு ஈரான், சவூதி அரேபியா, ரஷ்யா, ஈராக், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியா முயற்சித்தால், இந்தியாவிற்கான சிறப்பு அந்தஸ்துகளை ஈரான் ரத்து செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் துணைத் தூதரின் இந்த பேச்சு பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகளை அடுத்து ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் 2017 முதல் ஜனவரி 2018ம் ஆண்டு வரையில் ஈரான் 18.4 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

Tags: Special criteria India canceled

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Kowshalya V

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

14 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

17 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

17 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

18 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

18 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

19 hours ago