Type to search

அண்ணணுக்காக உயிரிழந்த பாசத் தங்கை! – கோவில்பட்டி சோகம்!

Tamil nadu

அண்ணணுக்காக உயிரிழந்த பாசத் தங்கை! – கோவில்பட்டி சோகம்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவலை தொலைபேசியில் கேட்ட தங்கையும் மாரடைப்பால் உயிரிழந்த சோகமான சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது.sister died brother suicide – kovilpatti tragedy

திருப்பதி தோணுகால் தலையாரியாக பணியாற்றி வந்தார். மது அருந்தி விட்டு வேலைக்கு வந்ததால், திருப்பதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் பணிக்கு சேர்ந்த பின்பும், தொடர்ந்து மதுவிற்கு அடிமையாகி பணிக்கு சரிவராத காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தரமாக திருப்பதி பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து திருப்பதி கேரளா மாநிலத்தில் வேறு பணிக்கு சென்று விட்டார். இந்நிலையில் மீண்டும் தலையாரி வேலை கிடைத்ததால், சொந்த ஊரான கோவில்பட்டி திரும்பியுள்ளார் திருப்பதி.

மதுவுக்கு அடிமையான திருப்பதியிடம், இனி குடிக்காமல் வேலைக்கு போகும்படி பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர். திங்கட்கிழமை மாலை திருப்பதியை பார்க்க வீட்டிற்கு சென்ற போது, வீடு உள்புறமாக பூட்டி இருந்துள்ளது.

பலமுறை கதவை தட்டியும் திருப்பதி கதவை திறக்காததால், அருகிலுள்ள அவரது தங்கை மகாலட்சுமிக்கு பெற்றோர் தகவல் தெரிவித்துள்ளனர். கணவருடன் வந்த மகாலட்சுமி பலமுறை கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, திருப்பதி தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

போலீசாருக்கும், அவரது உறவினர்களுக்கும் திருப்பதி இறந்த தகவலை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறுக்குசாலை அருகேயுள்ள அரசரடிகுமாரபுரத்தில் கணவர் ராஜமித்தரனுடன் வசித்து வந்த தங்கை கற்பகவல்லிக்கு திருப்பதி இறந்த செய்தியை உறவினர்கள் செல்போனில் அழைத்து தெரிவித்துள்ளனர்.

கற்பகவல்லி தனது கணவர் செல்போனிற்கு அண்ணன் திருப்பதி இறந்த செய்தியை தெரிவித்துள்ளார். பேசி கொண்டே இருக்கும் போது கற்பகவல்லி பேசுவதை நிறுத்தியதால் சந்தேகமடைந்த ராஜாமித்தரன், தனது தாய் செல்போனிற்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.

மாடியில் உள்ள வீட்டிற்கு சென்ற பார்த்தபோது காதில் செல் போனை வைத்த படியும், கையில் டிவி ரிமேட் வைத்த நிலையிலும் கற்பகவல்லி அசைவின்றி கிடந்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தபோது, கற்பகவல்லி மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மது பழக்கத்தை விட சொல்லி, திருப்பதியை அவரது பெற்றோர் திட்டியதால் மன அழுத்ததில் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மது பழக்கத்திற்கு அடிமையானாலும், குடும்பத்துடனும், தங்கைகளிடமும் மிகுந்த அன்பு கொண்டவர் திருப்பதி என அவரது சகோதரி மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

சகோதரர்-சகோதரி என அடுத்தடுத்து இரண்டுப்பேர் உயிரிழந்தது தங்களுக்கு பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: