Type to search

விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்ஃபி எடுத்த நபர்!

INDIA

விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்ஃபி எடுத்த நபர்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

ராஜஸ்தான் அருகே விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்காமல், அவர்களுடன் சிலர் செல்ஃபி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.person took selfie struggling survive accident

பார்மர் அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் பர்மானந்த் என்பவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜெமராம், சாந்தாராம் ஆகியோர் சாலையில் விழுந்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, அந்த வழியாக சென்ற சிலர், காயம் அடைந்தவர்களை மீட்காமல் செல்ஃபி எடுத்ததுடன், வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர்களும் உயிரிழந்தனர். செல்ஃபி மோகத்தால் நேரிட்ட இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரத்துப்போன மனித நேயம் என்ற தலைப்பில் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: