Categories: India Head LineTamil nadu

பேரறிவாளனுக்காக ராகுல் காந்தியிடம் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்!

பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என ராகுல் காந்தி தன்னிடம் தெரிவித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.no objection freedom expression’ – Ranjith reported Rahul’s statement

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தியை தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்தச் சந்திப்பின்போது பா.ரஞ்சித்துடன், நடிகர் கலையரசனும் சென்று ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி இன்று பகிர்ந்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தது ” திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்தேன். தமிழில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களான மெட்ராஸ், கபாலி, காலாவை இயக்கியவர்.

உடன் நடிகர் கலையரசனையும் நேற்று சந்தித்தேன். நாங்கள் அரசியல், திரைப்படங்கள், சமுதாயம் பற்றி பேசினோம். இந்தச் சந்திப்பும் உரையாடலும் மகிழ்ச்சியளிக்கிறது, இதுபோன்ற பேச்சுகள் தொடரும் என எதிர்பார்க்கிறேன்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தி தன்னிடம் “ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை விடுவிப்பதில் தங்கள் குடும்பத்துக்கு ஆட்சேபம் இல்லை” என தெரிவித்தாக பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

11 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

14 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

14 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

15 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

15 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

16 hours ago