Categories: INDIA

மும்பையில் பெய்துவரும் கனமழையால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

{ mumbai heavy rain }

மராட்டிய மாநில தலைநகர் மும்பை மற்றும் குஜராத்தில் வெளுத்துவாங்கும் கனமழையால் இயல்பு   மாநிலத்தில் கனமழைக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மராட்டிய மாநிலத்தின் மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதுடன், தண்டவாளங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மின்சார ரயில்களும், வெளியூர் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். தண்டவாளங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்களில் பயணிகளை மீட்கும் நடவடிக்கைக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பயன்படுத்தப்படுகின்றனர். மோசமான வானிலை மற்றும் ஓடுதளங்களில் மழை நீர் தேங்கியதன் காரணமாக விமானங்களும் தாமதமாகவே இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீயணைப்புப்படை மற்றும் கடற்படை வீரர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட், அகமதாபாத், வதோதரா, வெரவல், மஹுவா, வால்சாத் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், வீடுகளை விட்டு, வெளியே வரமுடியாமல் தவிக்கும் பொதுமக்கள் மழைநீர் புகுந்த வீடுகளிலேயே செய்வதறியாது முடங்கியுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்திலும் பல இடங்களில் கனமழை கொட்டி வருவதால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தலன்வாலா, சஹாஸ்பூர், பல்லிவாலா ஆகிய இடங்களில் வெள்ளத்தில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கனமழையால் டேராடூனில் கட்டிடம் இடிந்துவிழுந்து 4 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் மலைச் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில், மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags: mumbai heavy rain

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Kowshalya V

Recent Posts

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

22 mins ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

56 mins ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

1 hour ago

ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

செப். 21, சீமான் தலைமையில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.seeman's…

2 hours ago

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் : கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.people's justice ready parliamentary elections: kamal haasan சென்னை விமான நிலையத்தில்…

2 hours ago

இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் – ஸ்டெர்லைட்டின் தில்லு முல்லு

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தாமிரபரணி பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர் ஒருவர், கூலிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு, கலெக்டர்…

3 hours ago