Categories: INDIA

விமான டிக்கெட் விலையில் அதிரடி குறைப்பு: 12ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் இண்டிகோ!

{ Indigo celebrate 12 Anniversary }

12 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 4 நாட்கள் சிறப்பு சலுகை விலையில் விமான டிக்கெட்கள் வழங்கும் சலுகையை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

குறைந்த விலை விமான சேவை அளிக்கும் நிறுவனமாக அறியப்படும் இண்டிகோ, 12ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறது வரும் ஆகஸ்ட் 4ல் கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி இன்று (ஜூலை 10) முதல் ஜூலை 13ஆம் திகதி வரை சிறப்பு விலை சலுகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 1,212 ரூபாய் முதல் விமானக் கட்டணம் தொடங்குகின்றது. மொத்தம் 12 லட்சம் இருக்கைகள் இச்சலுகை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இதனைப் பயன்படுத்தி (ஜூலை28- 2018 ), முதல் (மார்ச்30 20190-க்கு இடைப்பட்ட காலத்தில் வாடிக்கையாளர்கள் பயணிக்கலாம். உள்ளூர் மட்டுமல்லாது, வெளிநாட்டு வழித்தடங்கள் உட்பட அனைத்து வழித்தடங்களுக்கும் இச்சலுகை திட்டம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சலுகை திட்டத்தில் சில நிபந்தனைகளையும் அந்நிறுவனம் விதித்துள்ளது, அதன்படி ஒவ்வொரு சேவையிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீட்கள் மட்டுமே இத்திட்டத்திற்கென ஒதுக்கப்படும்.

இந்த சலுகை சீட்கள் இல்லாத பிற சீட்களுக்கு வழக்கமான விலையே விதிக்கப்படும், ஒருமுறை வாங்கிய டிக்கெட்கள் கேன்சல் செய்யப்பட்டால், டிக்கெட்டுக்கான முழு தொகை திரும்பக்கிடைக்காது.

இந்நிலையில், ஏர் ஏசியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனங்களும் இதே போல சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Indigo celebrate 12 Anniversary

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Kowshalya V

Recent Posts

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

2 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

2 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

3 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

4 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

4 hours ago

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

21 hours ago