Categories: INDIAIndia Top Story

​பிரான்ஸை பின்னுக்கு தள்ளி உலகின் 6-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி!

{ India advanced France largest economy }

பிரான்ஸை பின்னுக்குத் தள்ளி உலக அரங்கில் 6வது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என உலக வங்கி அறிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டிற்கான பொருளாதாரம் தொடர்பான புள்ளிவிவரங்களை உலக வங்கி வெளியிட்டுள்ளது, அதனடிப்படையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி (GDP) ஆனது 2.59 டிரில்லியன் (1,65,76,000 கோடி ரூபாய்) டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிரான்ஸ் நாட்டின் ஜிபிடி ஆனது 2.58 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. இதன் மூலம் இதுவரை உலகின் 6வது பெரிய பொருளாதார நாடாக விளங்கிய பிரான்ஸை இந்தியா முந்தியுள்ளது.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் என அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டதால், ஒரு கட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவு சுணக்கம் ஏற்பட்டிருந்தது, அதன் பின்னர் பொருளாதாரம் ஏற்றம் காணத்தொடங்கியது.

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்டதாக இந்தியா உள்ளது என உலக வங்கி கூறியிருந்தது, 2018ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 % ஆகவும், அடுத்து வரும் ஆண்டுகளில் 7.5% ஆக இருக்கும் எனவும் உலக வங்கி கணிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி ஆலோசனை மையமானது, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளை விரைவில் முந்தி உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக 2032ஆம் ஆண்டுவாக்கில் இந்தியா விளங்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதாரமானது தற்போது நீடித்த வளர்ச்சியை வழங்கவல்ல வலுவான, நெகிழ்வான மற்றும் திறன் கொண்டதாக உள்ளது என்று உலக வங்கியின் அபிவிருத்தி வாய்ப்புகள் குழுவின் தலைவர் அய்ஹன் கோஸ் கூறியுள்ளார்.

வலுவான தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெருக்க உதவும் என்று உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: India advanced France largest economy

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Kowshalya V

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

4 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

7 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

7 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

8 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

9 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

9 hours ago