Type to search

8 வழிச்சாலை திட்டத்திற்காக இடிக்கப்படும் 3 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு பள்ளிக்கூடங்கள்1

India Top Story Tamil nadu

8 வழிச்சாலை திட்டத்திற்காக இடிக்கப்படும் 3 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு பள்ளிக்கூடங்கள்1

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

{ Government schools distroy selam project }

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சுமார் 3 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு அரசு பள்ளிக்கூடங்கள், சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வழியாக எட்டு வழிச்சாலை செல்வதால் அப்பகுதியில் நிலங்களை அளக்கும் பணிகள் நடைபெற்றன. தற்போது பாதிப்புகள் குறித்து வருவாய்த் துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர். இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், அரூர் பகுதியில் உள்ள இரு அரசுப் பள்ளிகளும் இடிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எம்.தாதம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பங்களிப்பு நிதியோடு 1 கோடியே 66 லட்சம் செலவில் 6 மாதத்திற்கு முன் இந்த அரசு உயர்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. இதே போல, மஞ்சவாடி கனவாய் அருகே லட்சுமாபுரத்தில் பழங்குடியின மாணவர்களுக்காக பல ஆண்டு போராட்டத்திற்கு பின் 1 கோடியே 68 லட்ச செலவில் கட்டப்பட்ட அரசுப் பள்ளியும் இடிக்கப்படவுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags: Government schools distroy selam project

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like