Type to search

8 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை! – அரசு மருத்துவமனை மறுப்பு!

Tamil nadu

8 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை! – அரசு மருத்துவமனை மறுப்பு!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

காப்பீட்டு அட்டை இல்லாததால், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 வயது சிறுமிக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யாமல் திருப்பி அனுப்பிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.8-year-old girl surgery – government hospital dispute

சிவகங்கை மாவட்டம், கட்டிகுளத்தைச் சேர்ந்த கருப்புசாமியின் மகள் விவிகாஸ்ரீ. பள்ளியில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமின்போது, விவிகாஸ்ரீக்கு குடலிறக்க நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை அடுத்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 28ம் தேதி சிறுமி அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனைகள் முடிந்த நிலையில் 9-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் சிறுமிக்கு திட்டமிட்டபடி 9-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. காப்பீட்டு அட்டை இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும், மருத்துவமனை ஊழியர்கள் தன்னை தரக்குறைவாக திட்டியதாகவும் கருப்புசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கருப்புசாமியின் புகார் குறித்து மருத்துவமனை வட்டாரங்களில் கேட்ட போது, அறுவை சிகிச்சைக்கு காப்பீட்டு அட்டை இருந்தால் நல்லது என்றும், அந்த அட்டை கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், கருப்புசாமியின் புகார் குறித்து விசாரிப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: