Type to search

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிலைகள் மாயம்!

Tamil nadu

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிலைகள் மாயம்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

{ Statues Tiruvannamalai Annamalaiyar Temple }

திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் கோவிலில் 2 சிலைகள் மாயமாகியுள்ளது குறித்து கோவிலின் இணை ஆணையர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஆனி பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அண்ணாமலையார் கோவிலில் சிலைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அண்ணாமலையார் கோவிலில் நடராசர், சோமாஸ்கந்தர், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. அவை பஞ்சலோகம், பித்தளை, தாமிரம் உள்ளிட்ட உலோகங்களினால் ஆனவை. கடந்த ஓரு மாதமாக சிலைகள் மற்றும் ஆபரணங்களை கணக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கோவிலின் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 2 பித்தளை சிலைகள் காணவில்லை என்று கோவிலின் இணை ஆணையர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ஒன்றேகால் அடி உயரம் கொண்ட தண்டாயுதபாணி சிலையும், முக்கால் அடி உயரம் கொண்ட பித்தளை சூளமும் காணவில்லை என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் பல கோடி மதிப்பிலான கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளை ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு மீட்டு வரும் நிலையில், மேலும் 2 சிலைகள் காணாமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Statues Tiruvannamalai Annamalaiyar Temple

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like