Type to search

மிரட்டிய வாலிபருக்கு கத்திக்குத்து! – தடுக்க சென்றவருக்கு கை விரல் துண்டிப்பு!

Tamil nadu

மிரட்டிய வாலிபருக்கு கத்திக்குத்து! – தடுக்க சென்றவருக்கு கை விரல் துண்டிப்பு!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

குழந்தைகளை விளையாட விடாமல் மிரட்டிய வாலிபருக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது. இதை தடுக்க சென்றவருக்கு கை விரல் துண்டானது.screaming young teenager – Cut hand pastor

இதுதொடர்பாக, ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான ஆட்டோ டிரைவரின் தந்தையை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகர் முதல் தெருவில் வசிப்பவர் வெங்கடேஷ் (33). தனியார் நிதி நிறுவன ஊழியர். அதே பகுதியில் 10வது தெருவில் வசிப்பவர் ஜெயகாந்தன் (27). இருவரும் நெருங்கிய உறவினர்கள்.

ஜெயகாந்தனின் வீட்டு அருகே வசிப்பவர் ராஜ்கமல் (32). ஆட்டோ டிரைவர். இவரது 2 குழந்தைகளும் ஜெயகாந்தனின் வீட்டில் விளையாடி வருவது வழக்கம். அவ்வாறு, அக்குழந்தைகள் விளையாடுவது வெங்கடேஷுக்கு பிடிக்கவில்லை.

இதுதொடர்பாக, ராஜ்கமல் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ராஜ்கமலின் 2 குழந்தைகளும் நேற்று முன்தினம் ஜெயகாந்தனின் வீட்டில் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்தன. இதை பார்த்து ஆத்திரமடைந்த வெங்கடேஷ், அக்குழந்தைகளை மிரட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து அக்குழந்தைகள் தனது தந்தை ராஜ்கமலிடம் அழுதபடி கூறியுள்ளன. இதில் ஆத்திரமடைந்த ராஜ்கமல், அவரது தந்தை செல்வராஜ் (55) ஆகிய இருவரும் குடிபோதையில் ஜெயகாந்தனின் வீட்டுக்கு வந்து, வெங்கடேஷிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.

இருதரப்பினரிடையே வாய்த்தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த செல்வராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேஷின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில், அவரது குடல் பகுதி வெளியே வந்ததால், அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதை ஜெயகாந்தன் தடுக்க முயற்சிக்க, அவரது இடது கையிலும் பலத்த வெட்டுக்காயம் விழுந்து விரல் துண்டானது. இருவரும் ரத்த வெள்ளத்தில் அலறி துடிப்பதை பார்த்து செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புகாரின்பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் ராஜ்கமலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவான செல்வராஜை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: