Type to search

மூதாட்டிகளை குறிவைத்து தங்கச்சங்கிலியை கவர்ந்து சென்ற மர்ம நபர்!

Tamil nadu

மூதாட்டிகளை குறிவைத்து தங்கச்சங்கிலியை கவர்ந்து சென்ற மர்ம நபர்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

சென்னையில் 62 வயது மூதாட்டியிடம் பழைய நகைக்கு புதிய நகை தருவதாகக் கூறி, 6 சவரன் சங்கிலியை கவர்ந்து சென்ற நபரை சிசிடிவி காட்சிகளின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.mysterious person hooked golden chain target ancients

தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஜானகி, ஆழ்வார்ப்பேட்டை சீத்தாம்மாள் சாலையில் தனியார் நிறுவனத்தில் துப்புரவுத் தொழிலாளியாக உள்ளார்.

இன்று காலை அங்கு அவரை சந்தித்த ஒரு நபர், ஜானகி அணிந்துள்ள பழைய தங்கச்சங்கிலிக்கு பதிலாக புதிய தங்கச்சங்கிலியை தருவதாகக் கூறியுள்ளான்.

mysterious person hooked golden chain target ancients

இதை நம்பி 6 சவரன் தங்கச்சங்கிலியை ஜானகி கொடுத்துவிட, புதிய 8 சவரன் சங்கிலி என்று கூறி ஒரு சிறிய பெட்டியை அவன் கொடுத்துள்ளான்.

மேலும், ஏதேதோ பேசி ஜானகியின் செல்போனையும் பெற்றுக் கொண்டு அவன் மாயமானான். பின்னர் பெட்டியை பார்த்த ஜானகி, அதில் எதுவுமே இல்லாததால் அதிர்ச்சியுற்று, தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நகையை கவர்ந்து சென்றவனின் உருவம் அதில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில் அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல, உஸ்மான் சாலையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை, போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி ஆட்டோவில் ஏற்றிச் சென்ற 2 பேர், 2 சவரன் மோதிரத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து பாண்டி பஜார் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: