Type to search

கர்நாடகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை : காவிரியிலிருந்து நீர் திறக்க குமாரசாமி உத்தரவு!

INDIA India Head Line

கர்நாடகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை : காவிரியிலிருந்து நீர் திறக்க குமாரசாமி உத்தரவு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ karnataka minister announced }

பெங்களூரு: கனமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் காவிரியிலிருந்து நீர் திறக்க அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே கபினி அணையில் இருந்து ஏற்கனவே 38,000 கன அடி நீர் வெளியேறும் நிலையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கபினி அணையில் திறந்து விடப்பட்டு வரும் நீரால் காவிரி ஆறு, ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க காவிரி ஆற்று பகுதியில் அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்வதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கேயுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காவிரியிலிருந்து கூடுதல் நீர் திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: karnataka minister announced

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like