Type to search

சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கு! – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

India Top Story Tamil nadu

சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கு! – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி குற்றவாளி தஷ்வந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.Hassini sex murder case – High Court Judge Today

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த ஹாசினி என்ற சிறுமி, கடந்த ஆண்டு 2017, பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மென்பொறியாளர் தஷ்வந்த் என்பவரை மாங்காடு போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தஷ்வந்த் ஜாமினில் வெளியே வந்தார்.

ஜாமினில் வெளியே வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் தஷ்வந்த் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவருக்கு விதித்த தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சார்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: