Type to search

சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்!

India Top Story Tamil nadu

சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்!

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

{ Hassini murder case convicts court verdict }

சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தல் செய்து எரித்து கொன்ற வழக்கில், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை ஐகோர்ட்உறுதி செய்ததுள்ளது.

இது தொடர்பாக தஷ்வந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. போரூரை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த பாபு என்பவரது 6 வயது மகள், அவரது தனது நண்பருடன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று மாயமானர்.

இதுகுறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்ததாக அந்த குடியிருப்பில் இருந்த தஷ்வந்த் என்ற வலிபரை போலீசார் கைது செய்தனர்இதையடுத்து, தஷ்வந்த் மீது கொலை, கடத்தல், குழந்ைதகளுக்கு எதிரான பாலியல் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி தீர்ப்பளித்தது.

35 பேர் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பில், கொலை வழக்கில் தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், பாலியல் கொடுமை, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனையை உறுதி செய்யக்கோரி மகளிர் நீதிமன்ற உத்தரவு உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்து செய்யக்கோரி தஷ்வந்த் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘குற்றச்சாட்டுகள் தொடர்பாக சேகரிக்கப்பட்ட சான்று ஆவணங்க ள் குற்றத்திற்கு தொடர்புடவைதானா என்பதை விசாரணை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது.

சாட்சிகள் முன்னுக்குப்பின் முரணாக சாட்சியம் அளித்ததையும், சந்தர்ப்ப சூழலையும் விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரை இறுதியாக பார்த்த சாட்சியத்தை வைத்து மட்டும் குற்றச்சாட்டு உண்மை என்று முடிவுக்கு வர முடியாது.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் இறந்துபோன சிறுமியின் உடைகளை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விமலா, ராமதிலகம் அடங்கிய அமர்வு, குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. மேலும் தஷ்வந்தின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

Tags: Hassini murder case convicts court verdict

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags: