Type to search

மீன்களில் ரசாயனக் கலவை தெளிக்கப்படும் விவகாரம் தொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

Tamil nadu

மீன்களில் ரசாயனக் கலவை தெளிக்கப்படும் விவகாரம் தொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

{ Food Safety Officers Examination }

மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஃபார்மலின் ரசாயனம் தெளிக்கப்படுகின்றதா? என்பது குறித்து சென்னையில் உள்ள மீன் சந்தைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை சைதாப்பேட்டை, கலங்கரை விளக்கம், காசிமேடு மீன் சந்தைகளுக்குச் சென்ற உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மீன்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக கிண்டியில் உள்ள கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

சோதனையில் ரசாயனம் கலந்தது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட கடைகாரரிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மீன்களை மட்டும் அல்லாமல், வெளியே அனுப்பப்படும் மீன்களின் மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Food Safety Officers Examination

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: