Categories: Tamil nadu

கெளரவத்திற்காக சிறுமியை கொன்ற குடும்பம்! – உண்மையை சொன்ன பாசத் தாய்!

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருடன் தனது மகள் சென்றதால், அதனை வெட்கக்கேடு என கருதிய தந்தையும், பாட்டியும் அவரை கொன்றுவிட்டு நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.family kill girl honor – phasat mother truth

இதுகுறித்து கொல்லப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த சிறுமியின் தாயாரன புஷ்பா கூறும்போது, “ என் மகள் சந்தியா முன்பெல்லாம் எப்போதும் கலகலவென்று சந்தாஷமாக இருக்கக்கூடியவள். ஆனால் அவளுக்கு ஒரு காதல் இருந்தது.

அதுவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு நபருடன். ஆனால் அந்த காதலுக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடன்பாடில்லை. இதனால் அவள் சோகமாகவே இருந்து வந்தாள்.

கடந்து ஜூன் 25-ஆம் தேதி என் மகளும் அவளின் பாட்டியும் அதாவது என் மாமியாரும் எங்கள் வீட்டில் இருந்தனர். என் கணவருக்கு திடீரென லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் நானும் அவரும் மருத்துவமனைக்கு சென்றோம். இரவு முழுக்க அங்கேயே தங்க நேரிட்டதால் வீட்டிற்கு வர முடியவில்லை.

அடுத்த நாள் 11 மணி வரை அங்குதான் இருந்தோம். அப்போதுதான் திடீரென என் மாமியாரிடம் இருந்து என் கணவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதாவது என் மகள் சந்தியா தற்கொலை செய்துவிட்டாள் என்பதுதான் அது.

என் மனம் இடிந்து நொறுங்கியது போல உணர்ந்தேன். உடனே நான் என் கணவரும் அவசரம் அவசரமாக வீட்டிற்கு சென்றோம். அங்கே வீட்டின் முதல் அறையில் என் மகள் படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.

பூச்சிக்கொல்லி மருந்து நாற்றம் அவளை சுற்றிலும் வீசியது. நாக்கு வெளியே தள்ளப்பட்டிருந்தது. கழுத்து பக்கம் சிறிய இரத்த தடயங்களும் இருந்தன. “காலையில் எழுந்து பார்த்தேன். பாத்ரூமில் தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்தாள்” என என் மாமியார் என்னிடம் நடந்தவற்றை நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆனால் என் மாமியார் பேச்சில் எனக்கு நம்பிக்கையில்லை. உடனே போலீசாருக்கு தகவல் தெவித்தேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “என் மகளுக்கும் எங்கள் ஊருக்கு அருகே உள்ள ஊரில் வசிக்கும் பிரவீன் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞருக்கும் காதல் இருந்தது. அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டை விட்டு வெளியேறி பிரவீனுடன் சென்றுவிட்டார்.

நாங்கள் எங்கள் மகளை பிரவீன் கடத்தி சென்றுவிட்டார் என காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். அதன்பேரில் போலீசார் பிரவீனை கைது செய்தனர். பிரவீன் கைது செய்யப்பட்ட நாளிலேயே எங்கள் மகள் சந்தியா எங்கள் வீட்டில் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

நாங்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றினோம். பின்னர் அதிலிருந்து அவர் வெளியே வந்தாலும் சிறிய சோகத்துடன்தான் காணப்பட்டார்” என்றார்.

இதனிடையே போலீசார் சந்தியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியபோது, அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. சந்தியாவுடன் இருந்தது அவரின் பாட்டி மட்டுமே. எனவே போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவர் சந்தியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து சந்தியாவின் தாயான புஷ்பா மேலும் கூறும்போது, “ நாங்கள் மருத்துவமனையில் இருந்த அன்றைய தினம் இரவு, என் மாமியார் என் கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். சந்தியா மீண்டும் தற்கொலை குறித்து பேசுவதாக அவர் என் கணவரிடம் தெரிவித்திருக்கிறார்.

அப்போது என் கணவரோ, ஏற்கெனவே ஓடிப்போனதால் வீட்டிற்கே தலைகுனிவு ஏற்பட்டுவிட்டதாக என் மாமியாரிடம் தெரிவித்ததோடு மகளை கொலை செய்யும்படியும் கூறியிருக்கிறார்.

அதன்படி என் மாமியார் என் மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பாத்ரூமில் இழுத்துச் சென்று போட்டுள்ளார். பின்னர் தற்கொலை நாடகம் ஆட வாயில் பூச்சிக்கொல்லி மருந்தையும் ஊற்றியுள்ளார்.

போலீசார் விசாரணையில் இதனை கண்டுபிடித்துவிட்டனர்” என்றார். தற்போது சந்தியாவின் பாட்டி மற்றும் அப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

14 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

17 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

18 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

19 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

19 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

20 hours ago