நடிகர் “பவர் ஸ்டார் சீனிவாசன்” மீது மோசடி பிரிவில் வழக்கு!
Share

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புது வண்ணாரப்பேட்டை போலீசார் மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.actor fake section power star srinivasan
புது வண்ணாரப்பேட்டை அன்னை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “ சினிமா வாய்ப்பு தேடி அலைந்தபோது, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் தொடர்பு ஏற்பட்டது.
சினிமா ஆசையில் இருந்த எனக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக என்னிடம் உறுதி அளித்தார். அதற்காக ரூபாய் 4.16 லட்சத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் இன்றுவரை வாய்ப்பு வாங்கித் தரவில்லை.
தொடர்பு கொள்ள முயற்சித்தாலோ, நேரில் பார்க்க சென்றாலோ முடியவில்லை. என்னிடம் அவர் மோசடி செய்தது இதன்மூலம் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரித்து வரும் புது வண்ணாரப்பேட்டை போலீசார் தற்போது பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- மிரட்டிய வாலிபருக்கு கத்திக்குத்து! – தடுக்க சென்றவருக்கு கை விரல் துண்டிப்பு!
- 3வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்து கொடூரம்! (அதிர்ச்சி விடியோ)
- நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த டி.ராஜேந்திரன்!
- கொலை வழக்கிற்கு 13 நாட்களில் தீர்ப்பு வழங்கி அசத்திய நீதிபதி!
- நிருபர்கள் எனக் கூறி வசூல் வேட்டை! – இஸ்லாமியர்கள் கைது!
- சமுதாயத்தை சீரழிக்கும் “பிக்பாஸ்” நிகழ்ச்சி! – கொந்தளிக்கும் மக்கள்!
- முதல்வரே! எங்களோடு விவாதிக்கத் தயாரா? – “பாலா பாரதி” சவால்!
- “திமுக அழைத்தால் செல்வேன்” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்!
- அந்த ஒரு விஷயத்தில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டும் நோக்கம்?
- திருநங்கை உதவி ஆய்வாளருக்கு தொல்லை! – முன்னாள் காதலன் மீது புகார்!
- கெளரவத்திற்காக சிறுமியை கொன்ற குடும்பம்! – உண்மையை சொன்ன பாசத் தாய்!