Type to search

“நான் சத்தமாக பேசாத காரணம் இதுதான்”: தேமுதிக தலைவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்!

India Head Line Tamil nadu

“நான் சத்தமாக பேசாத காரணம் இதுதான்”: தேமுதிக தலைவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

{ Vijayakanth travels medical treatment }

தேமுதிக தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக நேற்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 40 நாட்கள் அங்கு தங்கி அவர் சிகிச்சை பெறுகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவர் உடல்நலம் தேறி கடந்த வாரம் புதன்கிழமை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேமுதிக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் அவருக்கு பேச்சுத் திறன் குறைந்து குரல் வளமும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் பொது இடங்களில் அவரால் நீண்ட நேரம் பேச முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அவர் பொதுக் கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளை கூட தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த்தை அமெரிக்கா அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். இதன்படி விஜயகாந்த் ேநற்று அதிகாலை 1.05 மணியளவில் மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான முனையத்துக்கு காரில் வந்தார்.

அவருடன் மனைவி பிரேமலதா மற்றும் மகனும் நடிகருமான சண்முகபாண்டியன் ஆகியோர் வந்திருந்தனர். விமானநிலையத்தில் முதல் மற்றும் 2வது நுழைவுவாயில் பகுதியில் விஜயகாந்த்தை பேட்டி எடுப்பதற்காக ஏராளமான பத்திரிகை மற்றும் டிவி நிருபர்களும் கேமராமேன்களும் காத்திருந்தனர்.

இதை அறிந்ததும் 4வது நுழைவுவாயில் வழியே விஜயகாந்த்தை குடும்பத்தினர் அழைத்து சென்றனர். விஜயகாந்த்தை தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த் அங்கு 40 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: Vijayakanth travels medical treatment

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags:

You Might also Like