Type to search

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைவான் கனவு கன்னி – யார் இந்த சூயூ ..?

Tamil nadu

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைவான் கனவு கன்னி – யார் இந்த சூயூ ..?

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

ஜிமிக்கி கம்மல் ஷெரில், கண்ணழகி பிரியா வாரியரை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவு கன்னி, சோவு சூயூ யார் அந்த பெண் அப்படி என்ன சாதித்து விட்டார்..?Taiwanese dream girl tamilnadu youths – sue?

கேரள பெண்களை டிரண்ட் செய்துவந்த நம் தமிழ்நாட்டு இளைஞர்கள், தற்போது, நாடு விட்டு நாடு தாண்டி, தைவான் அழகி ஒருவரின் அழகில் மூழ்கி கிடக்கின்றனர். கையில் வில்லை ஏந்தியவாறு சமூக வலைதளங்கள் முழுவதும் அவரது புகைப்படங்களும், வீடியோக்களும் நிரம்பி வழிகின்றன. இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு, அவர் தென்கொரிய வில்வித்தை வீராங்கணை என்று நினைத்தால், உங்கள் கணிப்பு தவறு.

உண்மையில், சூயூ, நடிகை, அதுவும் சினாமா நடிகை இல்லை. சீரியல், ஆல்பம், குறும்படங்களில் நடித்து பிரபலமானவர். பிறந்தது தைவானாக இருந்தாலும் தற்போது பணிபுரிவது தென்கொரியா… இரண்டு ரியாலிட்டி ஷோக்களில் அவர் பாதியில் வெளியேற்றப்பட, ரசிகர்களின் ஆதரவால் மீண்டும் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார்.

இதுவே அவரின் ரசிகர் பலத்திற்கு சான்று. கடந்த 2017 ஆம் ஆண்டு உலக அளவில் அழகிய முகம் கொண்ட 3 வது பெண் என்ற பெருமையை பெற்றார் சூயூ.அதெல்லாம் இருக்கட்டும்…. இளைஞர்களின் இதயத்தை துளைத்த வில்லை, சூயூ கையில் ஏந்தியது ஏன்…?

நம் நாட்டில் நடிகர்களுக்காக செலிபிரிட்டி பிரீமியர் லீக் நடப்பது போல, தென்கொரியாவில், நடிகர் நடிகைகளுக்காக “ஐடியல் ஸ்டார் அத்லட்டிக் சாம்பியன்ஷிப்” என்ற போட்டி நடத்தப்படும். அதில் பங்கேற்கும் நடிகைகள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி அசத்துவார்கள்.. அதில் தான், வில் வித்தையை தேர்ந்தெடுத்துள்ளார் சூயூ. வில்லை கையில் ஏந்தி, ஒற்றை கண்ணை மூடி கொண்டு விட்ட அம்பு, இலக்கை சரியாக சென்றடைந்ததா என்று கூட தெரியவில்லை.

போட்டியை ஒளிப்பதிவு செய்த கேமராமேன் கூட சூயூவின் கூந்தல் அசைவுகளில், மயங்கி நின்றுவிட்டார்போலும். இலக்கை விட்டு சற்று தவறினாலும், இளைஞர்களை இதயத்தை சரியாகவே துளைத்திருக்கிறது சூயூவின் அம்பு. பல இளைஞர்கள் இந்த அம்பு அழகியை வர்ணிப்பதற்கு காரணம்.

நம் நாட்டு பெண்களிடம் வம்பு செய்யத்தான் ஆம் ஷெரின், பிரியா வாரியர், தற்போது சூயூ என பிற மொழி அழகிகளையே தமிழ் இளைஞர்கள் கொண்டாடி வருவதால் நம்நாட்டு இளம்பெண்கள் சற்று கடுப்பாகி உள்ளதை சமூகவலைதளங்களில், காணமுடிகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: