Type to search

சர்கார் சர்ச்சை: விஜய் மற்றும் படக்குழுவுக்கு 10 கோடி அபராதம்!

India Top Story Tamil nadu

சர்கார் சர்ச்சை: விஜய் மற்றும் படக்குழுவுக்கு 10 கோடி அபராதம்!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

{ Sarkar Vijay film crew fined 10 crore }

சர்கார் பட போஸ்டரில் புகைப்பிடிப்பது போல் உள்ள காட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த 21-ஆம் திகதியன்று படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த போஸ்டரில், நடிகர் விஜய் கருப்பு கண்ணாடியுடன் சிகரெட் புகைப்பது போன்ற படம் இடம்பெற்றது. போஸ்டர் வெளியான நாளன்றே பா.ம.க. சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை ‘சர்கார்’ பட போஸ்டரில், விஜய் புகைப்பிடிப்பதுபோல் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

தமிழக பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை தொடர்ந்து விஜய் புகைப்பிடிப்பது போன்று வெளியிட்ட சர்கார் பட போஸ்டர்களையும் ஃபர்ஸ்ட் லுக்கையும் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சிரில் அலெக்ஸாண்டர் என்பவர் சர்கார் பட போஸ்டர் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு 10 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அதில் 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Sarkar Vijay film crew fined 10 crore

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags:

You Might also Like