Type to search

“ஒரே நாடு-ஒரே தேர்தல்” : 4 கட்சிகள் ஆதரவு! – 9 கட்சிகள் எதிர்ப்பு!

INDIA India Head Line

“ஒரே நாடு-ஒரே தேர்தல்” : 4 கட்சிகள் ஆதரவு! – 9 கட்சிகள் எதிர்ப்பு!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு 4 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 9 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.“One Country-Election” 4 parties support 9 parties protest

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டறிந்தது.

டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சிரோன்மனி அகாலி தளம், சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

தமிழகத்தை ஆளும் அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், 2019 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலோடு தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

அதேநேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 9 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பிற கட்சிகளுடன் ஆலோசித்து தனது முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளது. ஆனால்ஆளும் பாஜக இதுவரை சட்ட ஆணையத்திடம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: