Type to search

பிரபல ரவுடி முன்னா பஜ்ரங்கி சிறைச்சாலையில் சுட்டுக்கொலை!

INDIA

பிரபல ரவுடி முன்னா பஜ்ரங்கி சிறைச்சாலையில் சுட்டுக்கொலை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ Famous Rudy shot dead }

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத் சிறைச்சாலைக்குள் பிரபல ரவுடி முன்னா பஜ்ரங்கியை சக கைதி சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி முன்னா பஜ்ரங்கி கைது செய்யப்பட்டு ஜான்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பாக்பாத் மாவட்ட சிறைக்கு போலீசார் மாற்றினர். இந்த நிலையில், பாக்பாத் சிறையில் அதிகாலையில் கைதிகள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, சக கைதியான சுனில் ரதி என்பவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால், முன்னா பஜ்ரங்கியை சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து, சுனில் ரதியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் தனது கணவரை என்கவுன்டரில் கொல்ல திட்டம் தீட்டியிருப்பதாக முன்னாவின் மனைவி ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிறையில் நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்தப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Tags: Famous Rudy shot dead

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: