Type to search

அமாவாசை வருகிறது! : திருநாவுக்கரசர்! – இல்லை பவுர்ணமி வருகிறது! : தமிழிசை!

India Head Line Tamil nadu

அமாவாசை வருகிறது! : திருநாவுக்கரசர்! – இல்லை பவுர்ணமி வருகிறது! : தமிழிசை!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

அமித் ஷா வருகையை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசும், மற்றும் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது : Comes new moon Thirunavukkarasu – No puberty Tamilisai

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு :

லோக் ஆயுக்தா மசோதா குறித்து எல்லோருடைய கருத்துக்களை கேட்டறிந்து தாக்கல் செய்யப்பட்டால் இன்னும் வலுவாக இருக்கும். பிற கட்சிகளின் கருத்துகள் மற்றும் திருத்தங்களை ஏற்று லோக் ஆயுக்தா தாக்கல் செய்ய வேண்டும்.

எல்லா கட்சிகளின் கருத்தை கேட்டு மாநில மத்திய தேர்தல் நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் வைத்தால் செலவு குறைவு என்பதற்காக தேர்தல் நடத்த கூடாது. நீதிபதி சுந்தரத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது கண்டனத்துக்கு உரியது. நீதிபதியை மிரட்டுவது ஜனநாயகத்திற்கு எதிரானது.

அமித்ஷா வருகையை பெரிதாக பேசுகின்றனர். மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் ஒன்றும் கிருஷ்ண பரமாத்மா அல்லது ஏசு பிரானோ கிடையாது. அமித்ஷா ஒருமுறை அல்லது 1,000 முறை வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்பட போவதில்லை. அமித்ஷா வருகையால் பாஜகவுக்கு விடியல் ஏற்பட போவதில்லை. அவர்களுக்கு அம்மாவாசையாகத்தான் இருக்கும். இவ்வாறு திருநாவுக்கரசு கூறினார்.

பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் :

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை, தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தையும், எங்களுக்கு உற்சாக ஊக்கத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

ஏனென்றால் பா.ஜ.க. குறித்து நிறைய விமர்சனங்கள் எழுகின்றன. எந்த கட்சியாக இருந்தாலும், அது அடிப்படையிலே வளர்ந்து வரவேண்டியது இயல்பு தான். தேசிய கட்சி ஒன்று தமிழகத்தில் காலூன்றுவது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது.

தேசிய கட்சி தமிழகத்தில் காலூன்றுவது அவ்வளவு சுலபமல்ல. பல்லாயிரக்கணக்கானோர் அமித்ஷாவை வரவேற்க விமான நிலையம் வருகிறார்கள்.

அமித்ஷாவின் வருகையில் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் இடம்பெற போவதில்லை. முக்கிய பிரமுகர்கள் யாரையும் சந்திக்கவும் திட்டம் இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பும் கிடையாது.

இது அமைப்பு ரீதியான ஒரு கூட்டம். இது முழுக்க முழுக்க பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க.வை தயார்படுத்தும் நிகழ்வுக்காக நடைபெறும் முக்கிய கூட்டம். இதில் அதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட உள்ளது.

அமித்ஷாவின் வருகை எங்களுக்கு பவுர்ணமியாகவும், ஒரு சிலருக்கு அமாவாசையாகவும் இருக்கும். இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like