Type to search

8 மாதக் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை! – தந்தையின் வெறிச்செயல்!

Tamil nadu

8 மாதக் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை! – தந்தையின் வெறிச்செயல்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

மதுரை சோழவந்தான் அருகே, தனது 8 மாத ஆண் குழந்தையை கழுத்து நெரித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.8-month-old baby strangled death – Father’s wand

சோழவந்தான் அருகே உள்ள அம்மச்சியாபுரத்தை சேர்ந்த அஜித்குமார், கடந்த 2 வருடங்களுக்கு முன், அத்தை மகள் பாண்டிசெல்வியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கிஷோர் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், அஜித்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றோரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்து கணவருடன் தகராறில் ஈடுபட்ட பாண்டிசெல்வி, தாய்வீட்டிற்கு குழந்தையுடன் சென்று கடந்த 4 மாதமாக குழந்தையுடன் தனித்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது இரண்டாவது திருமணத்திற்கு குழந்தை தடையாக இருக்கும் என கருதிய அஜித்குமார், தனது மனைவியிடம் தான் திருந்தி விட்டதாக கூறி நயவஞ்சகமாக அழைத்து வந்துள்ளார்.

பின்னர் அவர், தனது குழந்தையை, நண்பரின் உதவியோடு கழுத்தை நெரித்து கொலை செய்து ஒன்றும் தெரியாது போல் நாடகமாடியுள்ளார்.

மருத்துவமனையில் குழந்தையை சோதித்த மருத்துவர்கள், குழந்தையின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறியதையடுத்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்நது போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அஜித்குமார் தனது குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து கொலைக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் மணியையும் போலீசார் கைது செய்தனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: