Type to search

​8 வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தால் அரசு வேலை நிச்சயம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி!

India Top Story Tamil nadu

​8 வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தால் அரசு வேலை நிச்சயம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

{ 8 highway handed government }

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கொடுப்பவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட சேதமடைந்த கிராமப்புற சாலைகளை 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள கிராமப்புற சாலைகளை புதுப்பிக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக கூறினார்.

தமிழக அரசுக்கு நற்பெயர் வந்துவிடக்கூடாது என எண்ணும் மக்கள் செல்வாக்கு இல்லாத தலைவர்களே 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பதாக கூறிய ஆர்.பி.உதயகுமார், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு 3 மடங்கு இழப்பீடும், உரிமையாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

Tags: 8 highway handed government

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares