Type to search

ஃபேஸ்புக் காதலன் உயிரிழந்த சோகத்தால் காதலி தற்கொலை!

Tamil nadu

ஃபேஸ்புக் காதலன் உயிரிழந்த சோகத்தால் காதலி தற்கொலை!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

ஃபேஸ்புக்கில் அறிமுகமான காதலன் உயிரிழந்ததை அடுத்து, சட்டகல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.girlfriend suicide dead love facebook lover

சென்னையில் சட்ட கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அஸ்வினி, நாகப்பட்டினத்தை சேர்ந்த தென்னவன் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர்.

இதனிடையே கடந்த மே மாதம், அஸ்வினி வீட்டிற்கு வந்த தென்னவனுக்கு, திடீர் என்று வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால், கடந்த இரண்டு மாதங்களாக மன உளைச்சலில் இருந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை திருவொற்றியூரில் முகநூல் காதலால் சட்டகல்லூரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் கோபி நகர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சந்திரன். இவருடைய மகள் அஷ்வினி சென்னை அம்பேத்கர் சட்டகல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இந்நிலையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த தென்னவன் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர்.

தென்னவன் பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான் நண்பர்களாக இருந்த அஸ்வினியும் தென்னவனும் காதலர்களாக மாறி ஓர் ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் அஸ்வினியின் பெற்றோர்கள் கேரளாவிற்கு சென்ற நேரத்தில் தனியாக இருந்த அஸ்வினி வீட்டிற்கு வந்த தென்னவன் இருவரும் சமைத்து உண்டு மகிழ்ந்துள்ளனர் திடீர் என்று தென்னவனுக்கு வலிப்பு ஏற்பட்டு அஸ்வினி வீட்டிலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து இரண்டு மாதங்களாக மனஉளைச்சலில் இருந்த அஸ்வினி இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் முகநூல் மூலம் நண்பர்களாகி காதலித்து காரணம் இல்லாமல் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: