முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை!
Share

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் வைரநகைகள் மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.former union minister P.chidambaram’s house robbery
ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் உள்ளது. இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வைர நகைகள் திருட்டுப் போனதாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதும், முகத்தை மறைத்துக் கொண்டு யாரோ அறைக்குள் செல்லும் காட்சியும் பதிவாகி உள்ளது. வீட்டில் வேலை செய்பவர்களில் யாரோ திருடியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ப.சிதம்பரத்தின் வீட்டிற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! – இந்திய தூதரகம்!
- ஐ.சி.யூவில் உயிருக்கு போராடும் 3 மாத குழந்தை! – உதவும் கரங்கள்!
- எங்களுக்கு உதவினால் ரூ.30 லட்சம் பரிசு..! – வாட்ஸ் ஆப் அதிரடி அறிவிப்பு!
- மாற்றுத் திறனாளி மகனை கொன்று தந்தையும் தற்கொலை!
- அன்னை தெரேசா காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை! – கன்னியாஸ்திரிகள் கைது!
- என்கவுன்டர் பயம்! – “ரவுடி ஆனந்தன்” சகோதரன் தற்கொலை முயற்சி!
- ஓரினச்சேர்க்கை 377 குற்றம்! – எதிர்த்து போடப்பட்ட மனு இன்று விசாரணை!